எல்லையில் பதற்றம் – அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சருடன் பேசிய ராஜ்நாத் சிங்

507

லடாக் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று அமெரிக்க பாதுகாப்புத்துறை ஆமைச்சருடன் தொலைப்பேசியின் வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த மோதலைத் தொடர்ந்து இந்தியா-சீனா எல்லையில் போர் பதற்றம் உருவானது. இரு தரப்பிலும் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டன. பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் இரு தரப்பு அதிகாரிகளும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவி, இந்திய பகுதிக்குள் முகாமிட்டு உள்ளதை செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு இடையில், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பருடன் தொலைபேசியின் வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

Advertisement