டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை! மத்திய அரசின் அதிரடி திட்டம்!

800

அண்மைக் காலமாக யூபிஐ, பிம், கூகுள் பே, ஃபோன்பே போன்ற சேவைகளின் கீழ் டிஜிட்டல் முறையில் பணம் பரிவர்த்தனை செய்வது அதிகரித்து வருகிறது. அதை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு அனைத்து கடைகளிலும் QR குறியீட்டைக் கட்டாயமாக்கலாம் என்று முடிவு செய்துள்ளது.

இதற்கான வரவறிக்கைக்கு ஜிஎஸ்டி கவுன்சிலும் ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய கொடுப்பனுவுகள் கார்ப்ரேஷன் அதற்கான பணிகள் ஈடுபட்டு வருகிறது. QR குறியீடு மூலம் பணம் பரிவர்த்தனை செய்வது அதிகரிக்கும் போது வணிகர், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் ஜிஎஸ்டி நன்மைகள் சென்றடையும்.

அனைத்து பரிவர்த்தனைகளும் கணக்கிற்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த QR குறியீடு சேவை அனைத்து கடைகளிலும் கட்டாயமாக்கும் போது கூடுதல் சலுகைகள், தள்ளுபடிகள், கேஷ்பேக் ஆஃபர்களை வழங்குவது குறித்து மத்திய அரசு விவாதித்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of