5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஆகாஷ் ஏவுகணை | Akash Missile

423

மத்திய அரசு இந்திய விமானப்படைக்கு ஆகாஷ் ஏவுகணைகள் வாங்க இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி விமானப்படைக்காக 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஆகாஷ் ஏவுகணைகளை வாங்கப்படுகிறது.

ஆகாஷ் ஏவுகணைகள் ஆகாயத்தில் பறந்து வரும் எதிரி போர் விமானங்களை தாக்கும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவை 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இது ஒளியை விட 2.5 மடங்கு வேகமாக சென்று தாக்கும் வல்லமை பொருந்தியது.

இத்தகைய சிறப்புகள் கொண்ட ஆகாஷ் ஏவுகணை முழுவதுமாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயார் செய்யப்பட்டது. புதிதாக வாங்கப்படும் ஆகாஷ் ஏவுகணைகள் பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில் நிறுவப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.