உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி நிதியுதவி! மத்திய அரசு அறிவிப்பு!

664

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, சிஆர்பிஎப் வீரர்கள் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 40 சிஆர்பி எப் வீரர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு இந்திய அரசியல் தலைவர்கள் உட்பட உலக நாடுகளும், கண்டம் தெரிவித்தது.

இதையடுத்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கு இடையே பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு, ரூபாய் 1 கோடி நிதியுதவி வழங்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.