பேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல்

430

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு 4 ஆயிரத்து 432 கோடி ரூபாய் நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக்குழு, பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு கூடுதலாக 3 ஆயிரத்து 338 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல, வறட்சியால் பாதிக்கப்பட்ட கர்நாடகாவிற்கு ஆயிரத்து 29  கோடி ரூபாயும், பனிச்சரிவு மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்திற்கு 64 கோடியும் நிதி உதவி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த நிதிகள் அனைத்தும் தேசிய பேரிடர் நிதியிலிருந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of