குழந்தைகள் நடன நிகழ்ச்சிகளில் அநாகரிகம்! மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை!

471

மத்திய தகவல் – ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்திவரும் நடன நிகழ்ச்சிகளில், சிறுவர், சிறுமிகளை தேவையற்ற முறையில் பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான சட்டவிதிமுறைகளை கடைப்பிடிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குழந்தைகள்,சிறுவர், சிறுமிகளை, திரைப்படப்பாடல்களுக்கு அநாகரிகமான வசனங்களுடன் நடனமாடச்செய்வதை தவிர்க்கவேண்டும் என்றும் மத்திய தகவல் -ஒலிபரப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேபிள் டிவி ஒழுங்குமுறைச்சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் செயல்படக்கூடாது என்றும் மத்திய தகவல் – ஒலிபரப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of