6-வது நாளாக குறைந்துவரும் பெட்ரோல், டீசல் விலை

578

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை இன்று 6-வது நாளாக குறைந்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்ததை அடுத்து, கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே சென்றது.

இந்நிலையில், கடந்த 18-ஆம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து, ஒரு லிட்டர் 85 ரூபாய் 88 காசுகளுக்கு விற்பனை ஆனது. பெட்ரோல் விலையை போலவே, டீசல் விலையும் குறைந்தது.

இதேபோல், காசுகள் அடிப்படையில் கடந்த 5 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்தது.

இந்நிலையில், 6-வது நாளான இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 11 காசுகள் குறைந்து 84 ரூபாய் 53 காசுகளுக்கு விற்பனையாகிறது.

இதேபோல், டீசல் விலையும் 7 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் 79 ரூபாய் 15 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 6 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு வெறும் ஒரு ரூபாய் 57 காசுகள் மட்டுமே குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of