ஆதார் எண்ணைப் பயன்படுத்தும்போது ஜாக்கிரதை! மத்திய அரசின் அதிரடி சட்டம்..?

521

நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ஆதார் மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, கடந்த 4ஆம் தேதி மக்களவையிலும், கடந்த 8ஆம் தேதி மாநிலங்களவையிலும் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

இந்த திருத்தப்பட்ட சட்டத்தின் படி, பல்வேறு தரவுகளுக்கு ஆதார் எண்ணை பெறும் முன், அதன் உரிமையாளரிடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என்பது மாற்றப்பட்டு, விருப்பத்தின் அடிப்படையிலானது என்றும் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆதார் பயன்பாட்டிற்கான விதிமுறைகளை மீறுபவர்களுக்கும், ஆதார் எண்களை பயன்படுத்தி தனி நபர்களின் ரகசியகங்களை திருடுபவர்களுக்கும், கடுமையான தண்டனை வழங்க வழிகாணும் வகையில், ஆதார் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட நிதி பரிவர்த்தனையின்போது, தவறான ஆதார் எண்ணை பதிவு செய்தாலோ, அல்லது வழங்கினாலோ, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வழிவகை செய்யும் நடைமுறையை வருகிற செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல், மத்திய அரசு அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of