”வர்தா” புயலுக்கு தராத நிதி..”வராத” புயலுக்கு தந்த மத்திய அரசு – சிறப்புத் தொகுப்பு

1318

ஃபானி புயல் பாதிப்பை சரிசெய்ய மத்திய அரசு, தமிழகத்திற்கு 309 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

என்னடா.. சித்திரை வெயில் பல்லிளிக்குது…இங்க புயலே அடிக்கல.. ஆனா நிதி ஒதுக்கீடா… என்று உங்களின் மனதில் உதிக்கலாம்…

அதுதான் பாஸ் நாங்க என மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது
கஜா புயலின் போது தமிழக அரசு சார்பில் ரூ.1000 கோடி நிதியை துறை மற்றும் பாதிப்புக்கள் வாரியாக கொடுக்கப்பட்டது.

மனித உயிரிழப்பு மற்றும் கால்நடை உயிரிழப்புக்கு 205 கோடியும், சேதமடைந்த வீடுகளுக்கு 100 கோடியும், பயிர் சேதம் உட்பட விவசாயப் பணிகளுக்கு 350 கோடியும், மின்துறை பராமரிப்புக்கு 200 கோடியும் ஒதுக்கியது.

மீன்வளத்துறைக்கு 41.63 கோடியும், புயல் பாதித்த மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர் நிதிக்கு 27 கோடியும், உள்ளாட்சித்துறைக்கு 25 கோடியும், டவுன் பஞ்சயாத்து நிவாரண பணிகளுக்கு 5 கோடி என மொத்தம் 1000 கோடி கொடுக்கப்பட்டது.

ஆனால் கஜா புயலில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 15,000 கோடி தேவை என தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தியும் வெறும் 1,146 கோடி தான் கொடுத்தது…

இதே போன்று வர்தா புயல் பாதிப்பின் போது சென்னை சுற்று வட்டாரத்தில் உள்ள மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. 2016 ஆம் ஆண்டு வர்தா புயல் பாதிப்புகளுக்காக, 22,573 கோடி ரூபாய் தமிழக அரசு கேட்டது.

ஆனால் மத்திய அரசிடம் இருந்து கிடைத்ததோ 266 கோடி ரூபாய் மட்டுமே..

தொடர்ந்து தமிழகத்திற்கு தேவை ஏற்படும்பொழுது பெரிதாக கண்டுகொள்ளாத மத்திய அரசு தற்பொழுது தமிழகத்தில் பாதிப்பில்லாத ஃபானி புயலுக்கு 309 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது மிகுந்த நகைப்பை ஏற்படுத்தியுள்ளது..

– எழுதுகோல் கர்ஜனை

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of