பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தி வருவது கண்டிக்கத்தக்கது

298

மக்களை பற்றி கவலைப்படாமல் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தி வருவது கண்டிக்கத்தக்கது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டம் வெற்றி பெற்றுள்ளது என்று கூறினார்.

போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். மக்களை பற்றி கவலைப்படாமல் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தி வருவதற்கு கண்டனம் தெரிவித்த அவர், அதை எதிர்த்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தியும் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். எண்ணெய் நிறுவனங்கள், மக்களிடம் இருந்து 11 லட்சம் கோடிக்கும் அதிகமாக பணத்தை சுரண்டி வருவதாகவும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.