தனியார் மயமாக்கும் ஏர்-இந்தியா மத்திய அரசு உறுதி

219

ஏர்-இந்தியா நிறுவனத்தை முற்றிலும் தனியார் மயமாக்குவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை நிறுவனமான ஏர்-இந்தியா கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த 2018-19 நிதி ஆண்டில் மட்டும் ஏர்-இந்தியா நிறுவனம், 7ஆயிரத்து 600 கோடி ரூபாய் ந‌‌ஷ்டத்தை சந்தித்து உள்ளது.

எரிபொருளுக்கான தொகையை வழங்காததால், 6 விமான நிலையங்களில் ஏர்-இந்தியா நிறுவனத்திற்கு எரிபொருள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏர்-இந்தியா நிறுவனத்தை முற்றிலும் தனியார் மயமாக்குவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

ஏர்-இந்தியா நிறுவனத்தை வாங்க பலரும் ஆர்வம் காட்டுவதாகவும் கூறினார்.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of