சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை அனுப்ப மத்திய அரசு கோரிக்கை

348

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை அனுப்பும் படி மத்திய அரசும் ,பிரதமர் அலுவலகமும் கேட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றியது தொடர்பான ஆவணங்கள் டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான ஆவணங்களை நாளை தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசாணைக்கு தடையை நீட்டித்த நீதிபதி மகாதேவன் அமர்வு,சிலை கடத்தல் வழக்குகளை விசாரிப்பது தொடர்பான நிலைப்பாட்டை சிபிஐ தரப்பு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு உத்தரவிட்டு ஒத்திவைத்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of