“மத்திய அரசு கூறுவது முட்டாள்தனமானது” – சீமான்

239

நாட்டின் பாதுகாப்பிற்காக குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது எனக் கூறுவது முட்டாள்தனமானது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டி உள்ளார்.

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் கொந்தளித்து வருகின்றனர் என்றும்,   உடனடியாக இந்த சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் உள்நாட்டுப் போர் வெடிக்கும்  என்றார்.

திபத்தியருக்கு இந்திய குடியுரிமை கொடுக்கும்போது ஈழத்தமிழர்களுக்கு கொடுக்காதது ஏன் எனவும் சீமான் கேள்வி எழுப்பினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of