ஏழ்மையை சுவருக்குப் பின்னால் மறைக்க மத்திய அரசு முயல்கிறது – காங்கிரஸ்

188

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் 24-ம் தேதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

குஜராத்தின் அகமதாபாத்துக்கு அதிபர் ட்ரம்ப் வருகை தரும்போது, அங்குள்ள குடிசைப் பகுதிகள் கண்ணில் படக்கூடாது என்பதற்காக மாநில அரசு சுவர்களை கட்டி வருகிறது.

இதைக் காங்கிரஸ் கட்சி கடுமையாகச் சாடியுள்ளது. முதலில் பொருளாதாரப் புள்ளிவிவரங்களை மறைத்த மத்திய அரசு, இப்போது வறுமையை, ஏழ்மையை சுவருக்குப் பின்னால் மறைக்க முயல்கிறது என்று விமர்சித்துள்ளது.

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, ஏழ்மை சுவரின் உயரத்திலும், நீளத்திலும் இருக்கிறது. இதுதான் பாஜகவின் புதிய இந்தியா என விமர்சித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of