கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடர் பகுதிகளாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்

334

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடர் பகுதிகளாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயாலால் பாதிக்க பட்ட இடங்களை ஆய்வு செய்தனர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்கள், கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை தேசிய பேரிடர் இடங்களாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கூறினர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரண பொருட்களை நீண்டகாலமாக வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

விவசாயத்தை இழந்து தவிக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் விவசாய கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், நீட் தேர்வின் தேர்வு நாளை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டனர்,இதை தொடர்ந்து புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு சென்று இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.