பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும்

256
palanisamy

பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல் மீதான வாட் வரியை குறைப்பது பறி தமிழக அரசு சிந்திக்கும் என்று கூறிய அவர், எரிபொருள் விலையை குறைப்பது மத்திய அரசின் கையில் தான் உள்ளது என்றார்.

மேகதாதுவில் எக்காரணத்தை கொண்டும் அணை கட்டக் கூடாது என்பதே தமிழக அரசின் நோக்கம் என கூறினார். வாக்குக்காக பணம் கொடுப்பதும், பெறுவதும் குற்றம் என கூறிய முதல்வர், பணம் கொடுக்க வேண்டிய நிலையில் அதிமுக இல்லை என்றார். குற்றச்சாட்டு கூறுவதால் மட்டுமே ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது , குற்றத்தை நிரூபித்து காட்ட வேண்டும் என்றார்.