திரையரங்கை திறக்க அரசு அனுமதி..! வேறு எதற்கெல்லாம் அனுமதி..? கம்ப்லீட் லிஸ்ட்..!

1829

வைரஸ் தொற்று காரணமாக, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது.

என்ன தான் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், திரையரங்குகள் திறப்பதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், மத்திய அரசு 5-ஆம் கட்ட தளர்வுகளை தற்போது அறிவித்துள்ளது.

அதில், அக்டோபர் 15-ஆம் தேதி முதல், சினிமா தியேட்டர்கள், மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் 50 சதவீத இருக்கைகளுடன் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 15-ஆம் தேதி முதல் நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் திறப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு பற்றி தெரிவித்த மத்திய அரசு, பெற்றோர்கள் ஒப்புதலுடன், அக்டோபர் 15-ஆம் தேதிக்கு பிறகு பள்ளிகள் திறப்பது பற்றி மாநில அரசு முடிவு செய்யலாம் என்று கூறியுள்ளது.

விளையாட்டு, கலாச்சார, அரசியல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை மட்டுமே பங்கேற்கலாம் என்ற கட்டுப்பாட்டிற்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.நிகழ்ச்சிகளில் எவ்வளவு பேரை அனுமதிக்கலாம் என்பதை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில், தளர்வுகளின்றி ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்கை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால், இன்னும் சில நாட்களில் அதுபற்றி தமிழக அரசு ஆலோசிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.