தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு..! அரசு அறிவிப்பு..!

1390

பெருந்தொற்று பாதிப்பு காரணமாக, கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

தற்போது அமலில் உள்ள ஊரடங்கு, முடிய இருப்பதால், ஜனவரி 31-ஆம் தேதி வரை ஊரடங்கை மீண்டும் மத்திய அரசு நீட்டித்துள்ளது.

நாட்டில் பெருந்தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தாலும் தொடர் விழிப்புணர்வு தேவை என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பிற நாடுகளில் பரவும் தொற்று, பிரிட்டனில் பரவியுள்ள புதிய வகை பெருந்தொற்று ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, எச்சரிக்கை தேவை என்றும் அரசு தெரிவித்துள்ளது.

Advertisement