“மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்.. ஆனால்..”  மத்திய அரசின் புதிய அறிவிப்பு..

634

மக்களவையில் இன்று திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அதில், இருமொழிக்கொள்கைதான் பின்பற்றப்படும் என்று தமிழக அரசிடம் இருந்து கடிதம் மூலம் வலியுறுத்தப்பட்டிருக்கிறதா என்று தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய அமைச்சர், தேசிய கல்விக்கொள்கையின் படி நாடுமுழுவதும் மும்மொழிக்கொள்கையே பின்பற்றப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

மூன்றாவது மொழியாக எந்தமொழியை தேர்வு செய்வது என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் மீது எந்த மொழியும் திணிக்கப்படாது என்றும் மத்தியஅமைச்சர் ரமேஷ்பொக்ரியால் விளக்கமளித்துள்ளார்.