ஆந்திர மாநிலத்தில் மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெட்டே மீது ஷு விசி தாக்குதல்

438

கடப்பா மாவட்டத்தில் மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்தார்.

அவரை முற்றுகையிட்ட ராயலசீமா கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆந்திர மாநில பிரிவினைக்கு பிறகு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்தும், கடப்பா மாவட்டத்தில் ஸ்டீல் தொழிற்சாலை அமைப்பதாக உறுதி அளித்து இதுவரை செய்யாததை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பா.ஜக.விற்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர், அமைச்சர் மீது ஷு விசி தாக்கினர்.

அதிர்ஷ்டவசமாக அமைச்சருக்கு அருகில் சென்று கீழே விழுந்தது. இதையடுத்து போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்தனர். இதேபோன்று ஆர்.எஸ்.எஸ். மாநாட்டிற்கு பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா வருவதை அறிந்த தெலுங்கு தேசம் கட்சியினர், அவரை முற்றுகையிட இருந்த நிலையில் அக்கட்சியினரை போலீசார் முன்கூட்டியே வீட்டுக்காவலில் வைத்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of