காங்கிரசின் அந்த 2 வாக்குறுதிகள்! கொதித்தெழுந்த பாஜக தலைவர்!

753

லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டார். அதில் பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.

மேலும், தேசத்துரோக சட்டப்பிரிவை நீக்குவோம் என்ற அம்சமும் அதில் இடம் பெற்றுள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, காங்கிரசின் பல வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதவை.

சில வாக்குறுதிகள் நாட்டுக்கே ஆபத்தானவை. பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் விரும்பும் வகையில் தேர்தல் அறிக்கையில் அம்சங்கள் உள்ளன. தகுதியற்றவர்கள் இந்த தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர் என்றார்.

உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜூ இதுபற்றி கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் இந்த வாக்குறுதி, தேச விரோதமானது. தேசத்திற்கு எதிராக பேசியவர்களை, எப்படி காங்கிரஸ் அரசு விடுதலை செய்யும் என்று அறிவிக்க இயலும். பாஜக தேச நலன், பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ளாது.

தேசத்துரோக வழக்காக இருந்தாலும் சரி, ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டமாக இருந்தாலும் சரி, தேசத்தின் நலன்தான் முக்கியம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of