மதுரை மாவட்டத்திற்கு முதல் பரிசு!! எதுலனு தெரியுமா?

527

இந்தியாவில் நீர் ஆதார மேலாண்மையின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு, மத்திய நீர் ஆதாரத்துறை அமைச்சகம் நீர் மேலாண்மையில் சிறந்துவிளங்கும் மாநிலங்களுக்கு ஆண்டுதோறும் ‘தேசிய தண்ணீர் விருதுகள்’ வழங்கி வருகிறது.

அதன்படி 2018-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. விழாவில் மத்திய நீராதாரத்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.

இதில் நீர் நிலைகள் புனரமைப்பு மற்றும் புதிதாக உருவாக்குதல் பிரிவில் மதுரை மாவட்டத்துக்கு முதல் பரிசும், சிவகங்கை மாவட்டத்துக்கு 3-வது பரிசும் கிடைத்தன.

மேலும் நிலத்தடி நீர் செறிவூட்டல் பணிகளுக்காக மதுரை மாவட்டத்துக்கு 3-வது பரிசு வழங்கப்பட்டது. இதைப்போல நதி மீட்டெடுத்தல் பணிக்காக நெல்லை மாவட்டம் 3-வது பரிசை பெற்றது.

விழாவில் மத்திய மந்திரி நிதின்கட்காரி பேசியதாவது:-

“இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை, ஆனால் நீர் மேலாண்மை போதுமானதாக இல்லை. தேசிய அளவிலான தண்ணீர் விருதுகளை வழங்கும் அமைப்பு நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றுவந்ததில், நீர் சேகரிப்பில் மக்கள் தங்கள் பங்களிப்பை செலுத்தும்படி ஊக்கப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி தெரியவந்துள்ளது.”

இவ்வாறு நிதின்கட்காரி பேசினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of