பட்டப்படிப்பு முடிக்காத பாஜக அமைச்சர்! நீண்ட நாள் பொய் அம்பலமானது!

1013

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுலுக்கு எதிராக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் போட்டியிடுகிறார். அங்கு அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், 4.71 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து உள்ளது. பட்டப்படிப்பை முடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

1993-ம் ஆண்டு 12-ம் வகுப்பு முடித்த பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் தொலைத்தூரக் கல்வி மூலமாக பி.காம் பட்டப்படிப்புக்கு சேர்ந்ததாகவும், முடிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

2014-ம் ஆண்டு தாக்கல் செய்த வேட்பு மனுவில் 1994ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அப்போது தவறான தகவலை கூறுவதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இப்போது அவர் பட்டப்படிப்பு முடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் மீண்டும் கேள்வியை எழுப்பியுள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, ஸ்மிருதி இரானி பட்டப்படிப்பை முடிக்கவில்லை என்பதை தற்போது ஒப்புக் கொண்டுள்ளார்.

நாங்கள் அதுபற்றி கேள்வி எழுப்பவில்லை. அப்படியானால் இதுவரை அவர் ஏன் பொய் சொல்லிக் கொண்டு இருந்தார், தொடர்ச்சியான பொய் தற்போது உறுதியாகியுள்ளது.

தேர்தல் ஆணையத்திடம் தவறான தகவல்களை சொல்லி ஏமாற்றிய அவரது வேட்புமனுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அத்துடன் அவர் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of