வன்முறையில் ஈடுபட்ட மத்திய அமைச்சரின் மகன் – கொலை முயற்சி வழக்கில் கைது செய்த போலீஸ்

326

மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங்-ன் மகன், கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் நர்சிங்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங்கின் மகன் பிரபால் படேல், 4 பேரை கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்த வன்முறை சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்த 50 வயதான ஈஷ்வர் ராய், மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக மேலும் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பாஜக எம்.பி ஜலம் சிங் படேல் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது, ஆனால் அவர் தற்போது வரை கைது செய்யப்படவில்லை.

பிரபால் மற்றும் அவரது உறவினர்கள் சட்டவிரோத மணற்கொள்ளையில் ஈடுபட்டது குறித்து இரண்டு பேருடன் கடுமையான விவாதத்தில் ஈடுபட்ட போது, கைகலப்பு ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

புகைப்படம் : தனது மகனுடன் மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங்

எனினும் அமைச்சரின் மகன் மற்றும் அவருடன் இருந்தவர்கள் தான் முதலில் தாக்குதலை தொடங்கினர் எனவும், ஒரு கட்டத்தில் அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

அமைச்சர் மகன் பிரபால் படேல் உட்பட கொலை முயற்சி, வன்முறையில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of