முதலமைச்சருக்கே அபராதம் தான்..! போக்குவரத்துத்துறை அமைச்சர் பளார்..!

448

போக்குவரத்து விதிகளை மீறினால் இனி முதலமைச்சரே ஆனாலும் அபராதம் செலுத்த வேண்டி வரும் என மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், போக்குவரத்து சட்டங்களை தவறாகப் பயன்படுத்தும் அந்த துறை சார்ந்த அதிகாரிகளை கண்காணிக்கும் வகையில், அதிநவீன நுண்ணறிவு போக்குவரத்து கண்காணிப்பு சாதனங்கள் மாநிலங்கள் தோறும் பொருத்தப்படவுள்ளதாகக் கூறியுள்ளார்.

உபேர், ஓலா போன்ற கால் டாக்சி நிறுவனங்களுக்கும் செப்டம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.

18 முதல் 35 வயது வரையிலான இளைஞர்கள் ஆண்டு ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் பேர் வீதம் வாகன விபத்துகளில் பலியாவதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த சட்டம் அந்த நிலையை குறைக்க உதவும் என்றும் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of