கொரோனா குறித்து ஆய்வு..! மத்திய குழு நாளை சென்னை வருகை..?

80

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக மத்திய குழு நாளை மாலை சென்னை வர உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரசால் 1.14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1571 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-ஆம் இடம் வகிக்கிறது.  இந்நிலையில்,  கொரோனா நிலவரம் தொடர்பாக ஆலோசிக்க மத்தியக்குழு நாளை தமிழகம் வர உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான இந்த குழு, தமிழகத்தில் தொற்று பரவல்,  கொரோனா தொற்றால் உயிரிழப்பு, கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு நடத்த உள்ளது.

பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் நாளை மாலை சென்னைக்கு வரும்  மத்தியக்குழு முதலமைச்சர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளது. கடந்த முறை சென்னை வந்த இந்த மத்தியக்குழு ஹெலிகாப்டரில் பறந்தபடியே ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of