பெட்ரோல், டீசல் விலையை ரூ.2.50 குறைத்து மத்திய அரசு நடவடிக்கை

726

வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வருகிறது. இந்த விலை உயர்வு பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அவதியுற வைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

ஜி.எஸ்.டி முறை அமல்படுத்தப்பட்ட பிறகு, பெட்ரோல் டீசல் விலையும் அதன் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ள நிலையில், மத்திய அரசு மறுப்பு தெரிவித்து விலை குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் சரிவு, வர்த்தக பற்றாக்குறை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள பிரதமர் மோடியின் தலைமையில் கீழ் மூத்த அமைச்சர்களின் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, பெட்ரோல், டீசல் விலையில் ரூ.2.50 குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் 1 ரூபாயும், மத்திய அரசு கலால் வரியில் 1.50 ரூபாயும் குறைக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசுகளும் ரூ.2.50 குறைக்க வலியுறுத்தப்படும். இது தொடர்பாக மாநிலங்களுக்கு கடிதம் எழுதப்படும். மத்திய அரசின் வலியுறுத்தலை மாநில அரசுகள் ஏற்றால் விலை ரூ.5 குறைய வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.

Advertisement