ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை செயல் அதிகாரி சாந்தா கோச்சார் ராஜினாமா

604

மும்பை: வீடியோகான் நிறுவனத்துக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு கடன் வழங்கிய விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாக சாந்தா கோச்சார் மீது இந்திய முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கவுன்சில் குற்றம்சாட்டியது. இதையடுத்து தலைமை செயல் அதிகாரி சாந்தா கோச்சார் மீது விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ சில மாதங்களுக்கு முன்பே ஆரம்ப கட்ட விசாரணையை தொடங்கியது.

இந்நிலையில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை செயல் அதிகாரி பதவியை சாந்தா கோச்சார் இன்று ராஜினாமா செய்துள்ளார். சாந்தா கோச்சாரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி நிர்வாகம் சந்தீப் பக்‌ஷியை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்வதாக அறிவித்தது. மேலும் சந்தீப் பக்‌ஷி 2023, அக்டோபர் 3-ந் தேதி வரை தலைமை செயல் அதிகாரியாக நீடிப்பார் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of