ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் – டெல்லியில் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதப் போராட்டம்

136
andra cm

ஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

ஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினார்.

இதையடுத்து மத்திய எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த சந்திரபாபு நாயுடு, டெல்லியில் இன்று காலை முதல் ‘தர்ம போராட்ட தீக்‌ஷா’ என்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த போராட்டத்தில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த அமைச்சர்கள், தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மற்றும் பல்வேறு கட்சிகளும் அதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.