“நீங்க பாடம் நடத்துறீங்க..” யோகி ஆதித்யநாத்திற்கு நெத்தியடி கொடுத்த தெலங்கான முதல்வர்..

35383

தெலங்கானா மாநிலம் கிரேட்டர் ஐதராபாத்தில் மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், ஆளும்கட்சியான ராஷ்டிர சமிதி கட்சிக்கும், பாஜகவிற்கும் இடையில் தான் பெரும் போட்டி நிலவி வருகிறது.

இதனால், உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக சார்பில், ஐதராபாத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஐதராபாத்தின் பெயரை பாக்யநகர் என ஏன் மாற்ற கூடாது என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்துள்ள, தெலங்கான முதல்வர் சந்திரசேகர ராவ், தனி நபர் வருமானத்தில் 28-வது இடத்தில் இருக்கும் மாநிலம் 5-வது இடத்தில் இருக்கும் தெலுங்கானாவுக்கு பாடம் நடத்த வேண்டாம் என்று நெத்தியடி பதில் அளித்தார்.

மேலும், ஒரு மாநகராட்சி தேர்தலுக்கு பாஜக தலைவர்கள் அனைவரும் பரப்புரைக்கு வருவது ஏன்..? என்றும் கேள்வி எழுப்பினார்.

Advertisement