தங்களின் வீரமரணத்தை எதிரிகளுக்கு பரிசளித்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம்- ஆந்திர முதலமைச்சர்

644

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய துணை ராணுவத்தை சேர்ந்த 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.இந்த தாக்குதலுக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் மற்றும் உலக நாட்டு தலைவர்களும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமின்றி அனைத்து மக்களின் ஒரே குறல் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பது தான்.

இந்த தாக்குதலில் தமிழக வீரர்கள் இரண்டு பேர் வீரமரணம் அடைந்தனர், அவர்களுக்கு தமிழக அரசின் சார்பாக இரண்டு குடும்பங்களுக்கும் தலா 20 லட்சமும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திறுந்தார்.

இந்நிலையில், இந்த பயங்கரவாத தாக்குதலில் தங்களின் வீரமரணத்தை எதிரிகளுக்கு பரிசலித்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of