சந்திரபாபு நாயுடு இன்று திமுக நிர்வாகிகளுடன் திடீர் சந்திப்பு

640

தேர்தல் களம் பரபரப்பாக இருக்கும் சூழலில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு திமுக நிர்வாகிகளை சந்திக்க இன்று சென்னை வருவதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் எதிர்வரும் 18 ஆம் தேதி வியாழக்கிழமை மக்களவை மற்றும் 18 தொகுதிகளின் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுகவின் நிர்வாகிகளை இன்று அண்ணா அறிவாலயத்தில் 12 மணிக்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திக்கிறார்.

சந்திரபாபு நாயுடு, உத்தரபிரதேச மாநிலம் பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி, மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி  ஆகியோர் பாஜக,காங்கிரஸ் கட்சிகள் அல்லாத மாற்று அணி உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில் சந்திரபாபு நாயுடு – திமுக நிர்வாகிகள் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of