இரண்டு தேர்தல் கேட்கும் முதலமைச்சர்! தேர்தல் ஆணையத்தின் முடிவு?

359

கடந்த ஏப்ரல் 11ம் தேதி ஒரே கட்டமாக ஆந்திராவின் 25 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இதேபோல் அங்கு மொத்தம் உள்ள 175 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்தது.

தேர்தல் நடந்த அன்று ஏராளமான இடங்களில் வாக்கு எந்திரங்கள் பழுதானது. இதனால் வாக்குப்பதிவு தாமதாக தொடங்கி நள்ளிரவு வரை நீடித்தது. அங்கு சுமார் 76 சதவீதம் வாக்குகள் பதிவானது.

இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திரா முதல்வருமான சந்திரபாபு நாயுடு தனது கட்சி நிர்வாகிகளுடன் இன்று டெல்லி வந்தார். அவர் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளித்தார்.

அந்த புகாரில் ஆந்திராவில் 30 முதல் 40 சதவீதம் வரை வாக்கு எந்திரங்கள் வேலை செய்யவில்லை. எனவே வாக்கு எந்திரங்கள வேலை செய்யாத 150 வாக்குச்சாவடிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு,

“தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பு ஆகும். ஆனால் அதேநேரம் பிரதமர் மோடி மற்றும் அவரது அரசின் சொல் பேச்சை கேட்டு செயல்படும் அமைப்பாக உள்ளது. எங்களுக்கு தேர்தல் ஆணையம் போதிய ஒத்துழைப்பு தரமறுத்துவிட்டது.

தேர்தல் ஆணையத்தின் இத்தகைய செயல்பாடு மிகப்பெரிய கேலிக்கூத்தாகும். இந்தியாவிற்கே இது பேரிடர் ஆகும். இதனால் நாட்டில் மிகப்பெரிய குழப்பம் ஏற்படும்.

எங்களுக்கு கிடைத்த அதிகாரப்பூர்வ தகவலின்படி, 4583 வாக்கு எந்திரங்கள் ஆந்திர தேர்தலில் வேலை செய்யவில்லை. இதனால் மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது”

என்றார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of