சந்திரசேகர ராவ் கொடுத்த உறுதிமொழி..! – தெலுங்கானாவில் வெடித்த சர்ச்சை..!

339

தான் பிறந்து வளர்ந்த ஊரில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் சாதி, மத பாகுபாடு இன்றி அரசு சார்பில் 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று தனது சொந்த ஊரான சிந்தமடகாவில் நடந்த பொது‌க் கூட்டத்தில் பேசிய சந்திரசேகர ராவ், “சாதி மற்றும் மத பேதங்கள் இல்லாமல், நமது கிராமத்தில் வாழும் ஒவ்வொரு குடும்பத்தினரு‌க்கும் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இதற்கான அரசாணையும் விரைவில் வெளியிடப்படும்.

அரசு தரும் இந்த பணத்தை விவசாய பணிகளுக்கோ, தொழில் தொடங்கவோ மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்” என தெரிவித்தார். இது தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனது சொந்த ஊருக்கு நன்மை செய்வதென்றால் தனது பணத்திலிருந்து செய்ய வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சந்திரசேகர ராவ் முதல்வர் போல அல்லாமல் கிராம தலைவர் போல செயல்படுகிறார் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது. அவரது இந்த பேச்சு பொதுமக்களிடையேயும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of