சந்திரசேகர் ராவ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டார்

294

சந்திரசேகர் ராவ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டதாக சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தலை ஒட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மற்றும் சோனியா காந்தி உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். மேடசால் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய சோனியா காந்தி, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி, விவசாயிகளை புறக்கணிப்பதாக தெரிவித்தார்.

முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், மக்கள் நலனில் அக்கறை இல்லாமல், சுய லாபத்திற்காகவே பணியாற்றுவதாக குற்றம் சாட்டினார். வளர்ச்சியின் அடையளமாக இருந்த தெலங்கானா தற்போது பின்நோக்கி சென்று கொண்டிருப்பதாக வேதனை தெரிவித்தார்.