சந்திரயான்-2..! வெற்றிகரமாக மாற்றப்பட்டது சுற்றுவட்டப்பாதை

377

சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக மாற்றப்பட்டது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவப்பகுதியை ஆராய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம், ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 6-ந்தேதி வரை படிப்படியாக 5 முறை உயர்த்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த 14-ந்தேதி, அதிகாலை 2.21 மணிக்கு பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சமிக்ஞை மூலம் சந்திரயான்-2 விண்கலத்தில் உள்ள என்ஜின் ஆயிரத்து 203 வினாடிகள் இயக்கப்பட்டது. அதையடுத்து சந்திரயான்-2 விண்கலம் பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து விலகி, நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது.

இந்நிலையில், என்ஜின் மீண்டும் ஆயிரத்து 738 வினாடிகள் இயக்கப்பட்டு, நிலவின் சுற்றுவட்டப்பாதையில் விண்கலம் செலுத்தப்பட்டது. இந்தப்பணி காலை 9.02 மணிக்கு செய்து முடிக்கப்பட்டதையடுத்து, நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவரும் சந்திரயான் -2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை இன்று பகல் 12.50 மணிக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டதாக இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Advertisement