இன்று நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைகிறது சந்திரயான்-2

213

இந்தியாவின் சந்திரயான்-2 விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் இன்று நுழைகிறது.

3ஆயிரத்து 850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியை சுற்றி வந்த சந்திரயானின் சுற்றுப்பாதை படிப்படியாக 5 முறை அதிகரிக்கப்பட்டது.

பின்னர் நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கிய சந்திரயான்-2 விண்கலம், இன்று நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைகிறது. இதற்காக சந்திராயனின் திரவ என்ஜின் இன்று காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் இயக்கப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான் விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சென்றதும், அதன் சுற்றுப்பாதை படிப்படியாக குறைக்கப்பட்டு, செப்டம்பர் 7ஆம் தேதி சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிறங்க உள்ளது.

Advertisement