சந்திரயான் – 2 நிலவை நெருங்கும்போது காலைவாரிய “சிக்னல்..!” – பிரதமர் மோடி இன்று உரை..

493

நிலவில் தரையிறங்க வேண்டிய, சந்திரயான்-2 லேண்டர்- விக்ரம்- விஞ்ஞானிகளுடன் தொடர்புகொள்ளாத நிலையில் நாட்டு மக்களிடம் இன்று காலை 8 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் என்ற லேண்டர், சனிக்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் நிலவின் தரைப்பகுதியில் தரை இறங்குவதாக இருந்தது.

நிலவின் அருகே 2.1 கிலோமீட்டர் தொலைவுக்கு அது அருகே சென்றபோது திடீரென விஞ்ஞானிகளுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இஸ்ரோவின் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று பெங்களூரில் உள்ள அதன் தலைமையகம் சென்று, விஞ்ஞானிகளுடன் அமர்ந்து சந்திரயான் லேண்டர், நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரடியாக பார்த்துக்கொண்டிருந்தார்.

ஆனால் விஞ்ஞானிகள் உடனான கட்டுப்பாட்டை லேண்டர் இழந்ததும், கவலைப்பட வேண்டாம் என்ற பிரதமர் ஆறுதல் கூறினார். முன்னதாக நேற்று காலை பிரதமர் வெளியிட்ட ட்வீட்டில் 130 கோடி இந்தியர்களும் சந்திரயான் வெற்றியை ஆவலோடு, எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று பிரதமர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு நாட்டு மக்களிடம் இதுதொடர்பாக அவர் உரையாற்றவுள்ளார். இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திலிருந்துதான் அவர் உரையாற்ற உள்ளார். அப்போது எந்தமாதிரியான அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of