சந்திரயான் – 2 விண்கலத்தை காண நள்ளிரவில் கூகுளில் தேடிய பாகிஸ்தானியர்கள் .. கூகுள் தரவில் தகவல்..!

892

கடந்த 7 ம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தை நிலவில் நிலைநிறுத்துவதற்கான கடும் முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டிருந்தது.

ஆனால் விக்ரம் லேண்டரின் தொலைதொடர்பில் துண்டிப்பு ஏற்பட்டதால் அந்த சந்திரயான் – 2 அனுப்பியதற்கான முயற்சி தோல்வியில் முடிந்தது. இருப்பினும் விக்ரம் லேண்டர் எங்கு மாயமானது என்பது குறித்து பல்வேறு ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் மேற்கொண்டு அதை கண்டறிந்தனர். அதற்கு தொலைதொடர்பை ஏற்படுத்தும் முயற்சியிலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.

இந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தின் நிலையை அறிவதற்காக நள்ளிரவு 2.30 மணியளவில் இந்தியர்களை போன்று பாகிஸ்தானியர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கூகுளில் தேடியது குறித்து தற்பொழுது செய்தி வெளியாகியுள்ளது.  Chandrayaan 2 மாற்றும் ISRO ஆகிய இரண்டையும் அதிகமாக பாகிஸ்தானியர்கள் தேடியுள்ளனர்.

கூகுளில் அளிக்கப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் பாகிஸ்தானியர்களும் சந்திரயான் – 2 விண்கலத்தின் வெற்றியை பார்ப்பதற்கு ஆர்வத்துடன் கூகுளில் தேடியுள்ளனர் என்பது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of