சந்திரயான்-2 – வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதை மாற்றியமைப்பு

147

சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை நான்காவது முறையாக வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த 20ஆம் தேதி நிலாவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்த, சந்திரயான் விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையை நான்காவது முறையாக இஸ்ரோ நேற்று மாலை 6.18 மணிக்கு மாற்றி அமைத்தது.

இதன் மூலம் நிலாவின் இருந்து குறைந்தபட்சமாக 124 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகபட்சமாக 164 கிலோ மீட்டர் தூரத்திலும் சந்திரயான்-2 விண்கலம் சுற்றி வருகிறது. இதைதொடாந்து வரும் ஒன்றாம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை 100 கிலோ மீட்டர் தூரமாக மாற்றி அமைக்கப்பட உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of