நவம்பருக்குள் சந்திரயான்-3.. இஸ்ரோ அதிரடி.. இனி சரவெடி..

210

சந்திரயான்-2 திட்டத்தின் கீழ், ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய மூன்று பாகங்கள் நிலவுக்கு அனுப்பப்பட்டது. ஆர்பிட்டர் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிறுத்தப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக லேண்டரும், ரோவரும் நிலவில் தரையிறங்கவில்லை.

இந்தநிலையில், அடுத்த திட்டத்தை நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ தயாராகி வருகிறது. சந்திரயான்-3 திட்டத்தை அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்த குழுக்கள் பல முறை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்திரயான்-3 திட்டத்தில், லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய இரண்டு பாகங்கள் மட்டும் நிலவுக்கு அனுப்பப்படும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.