இஸ்ரோவுக்கு சென்னை மெட்ரோ வித்தியாசமான ட்வீட்

322

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்கபகல் 2.40 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

சந்திராயன்-2 விண்கலம் நிலவில் தண்ணீர், கனிம வளங்கள் உள்ளதா என்பதை ஆராய்வதற்காக செலுத்தப்பட்டுள்ளது. சந்திராயன்-2 வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இஸ்ரோவிற்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் வித்தியசமான பாராட்டை இஸ்ரோவிற்கு தெரிவித்துள்ளது.

“சந்திராயன்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோவிற்கு வாழ்த்துகள். எங்கள் நகரத்திற்கு தேவையான புதிய நீர்வளத்தை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளோம். ஒரு வேளை நிலவில் நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் முதலில் நீங்கள் யாருக்கு சொல்ல வேண்டுமென்பது உங்களுக்கு தெரியும் என்று சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of