“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

732

நடிகர் சங்கத்தில் தற்போது உள்ள தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிக்காலம் முடிய இருப்பதால், நடிகர் சங்கத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது.

இந்த தேர்தலில் நடிகர் நாசர் தலைமையில் விஷால், குஷ்பு உள்ளிட்டவர்களும், பாக்யராஜ் தலைமையில் ராதிகா, சரத்குமார் உள்ளிட்டவர்களும் தேர்தலை சந்திக்கவுள்ளனர்.

ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில், எம்ஜிஆர் மற்றும் ஜானகி கல்லூரியில், இந்த தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர், எம்ஜிஆர் மற்றும் ஜானகி கல்லூரியில் நாடகம் நடத்த அனுமதி கோரியுள்ளார். இதனால் இந்த தேர்தல் நடக்குமா என்ற நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம், தேர்தலை எம்.ஜி.ஆர் கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

மேலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத இடத்தை தேர்வு செய்து, நாளைக்குள் அதை தெரிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of