அதிதீவிர புயலாக மாறியுள்ள பானி ! ஒடிசாவில் விமானங்கள் ரத்து

203

வங்கக் கடலில் உருவாகி, அதிதீவிர புயலாக மாறியுள்ள பானி புயல், ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தின் தெற்கு கடலோரப் பகுதியில் நாளை கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிதீவிர புயலாக மாறியுள்ள பானி புயல், புரி மாவட்டத்தின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலி பகுதிகளுக்கு இடையேயான கடலோரப்பகுதியில், நாளை பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது, மணிக்கு 175 முதல் 185 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

பானி புயல் காரணமாக, பயணிகளின் பாதுகாப்பு கருதி 43-க்கும் மேற்பட்ட ரெயில்களை தென்கிழக்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது.

இந்நிலையில், பானி புயல் நாளை கரையைக் கடக்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக இன்று நள்ளிரவு முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of