சீன அதிபர் வருகை – மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் | Urban and Metro Train

192

சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று மதியம் 1.30 மணி அளவில் தனி விமானத்தில் மூலம் சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு தமிழக பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர் காரில் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலுக்கு மதியம் 1.45 மணிக்கு செல்கிறார்.

சீன அதிபர் வரும் நேரத்தில் விமான நிலையத்தையொட்டி அமைந்துள்ள ரெயில் நிலையங்களில் ரெயில்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இறங்கி அவர் ஓட்டல் செல்லும் வரை அதாவது 1.30 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை ரெயில்கள் நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் மெட்ரோ ரெயில் சேவையும் தாமதமாகும். குறிப்பாக சீன அதிபர் வரும் நேரத்தில் சின்னமலை முதல் மீனம்பாக்கம் வரையில் மெட்ரோ ரெயில்கள் நிறுத்தப்பட்டு தாமதமாக இயக்கப்படும் என தெரிகிறது.

சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலான அனைத்து ரெயில் நிலையங்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of