ராஜமவுலி சொன்னதால் புது அவதாரம் எடுக்கும் அலியா | RRR

256

ராஜமவுலி பாகுபலி படத்தையடுத்து ஆர்ஆர்ஆர் என்ற சரித்திர படத்தை எடுத்துவருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிக்கின்றனர். ஹீரோயினாக அலியா பட் அறிமுகமாக உள்ளார்.

பாகுபலியில் பிரபாஸ், ராணா போன்றவர்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடற்கட்டை சிக்ஸ்பேக் தோற்றத்துடன் கட்டுமஸ்தாக மாற்றிக்கொண்டனர். அதற்காக கடுமையான பயிற்சிகளில் அவர்கள் ஈடுபட்டனர். அதேபோல் தற்போது நடிக்கும் ராம் சரண், ஜூனியர் என்டிஆரும் கடுமையான பயிற்சிகள் மூலம் உடற்கட்டை கட்டுமஸ்தாக்கியிருக்கின்றனர்.

இந்நிலையில் இவர்களுடன் நடிக்கும் அலியாபட்டும் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டியிருப்பதால் அவரையும் உடலை பிட்டாக வைத்துக்கொள்ள சொல்லி இயக்குனர் அறிவுரை கொடுத்திருந்தார். அதை ஏற்று கடந்த சில மாதங்களாக கடுமையான பயிற்சிகளில் அலியா பட் ஈடுபட்டு வருகிறார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of