கடவுளாக வழிபட்டு வந்த முதலை இறந்தது – கிராம மக்கள் சோகம்

436

சட்டீஸ்கர் மாநிலம், பவா மோஹ்தாரா என்ற கிராமத்தில் குளம் ஒன்றில் 250 கிலோ எடையும், 3.4 மீட்டர் நீளமும் உள்ள முதலை நீண்ட காலமாக வசித்து வந்தது.
இந்த, குளத்தை பயன்படுத்தும் மக்களையோ, கால்நடைகளையோ இதுவரை எதுவும் செய்தது கிடையாது. எனவே, கிராம மக்கள் இந்த முதலைக்கு ‘கங்காராம்’ என பெயரிட்டு வளர்த்தும் வழிபட்டும் வந்தனர்.

130 வயதான முதலை கடந்த செவ்வாய்க்கிழமை வயது  காரணமாக இறந்த நிலையில் நீரில் மிதந்தது. வனத்துறையினர் வந்து அதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர், அதை கிராம மக்களிடம் ஒப்படைத்தனர். கிராம மக்கள் அந்த முதலையின் உடலுக்கு மலர்தூவி இறுதி மரியாதை செய்தனர். பின்னர், உடலை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் ஊர்வலமாக எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இந்த ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.

மூன்று தலைமுறையை பார்த்த முதலை, குளத்தில் குளிப்பவரை கூட இதுவரை துன்புறுத்தியதில்லை. இரண்டு முறை இந்த கிராமத்திலிருந்து முதலையை கொண்டு சென்றிருந்தனர். பின் கிராம மக்களின் முயற்சியில் இந்த முதலை மீட்கப்பட்டு குளத்திலே விடப்பட்டது. இந்த கிராம மக்களின் வீட்டில் ஒருவராக பார்க்கப்பட்ட முதலை இறந்தது இவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of