சேரனுக்கு கிடைத்த சீக்ரெட் ரூம்..! கவினின் முகத்திரையை கிழித்த சேரன்..?

1451

பிக்-பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜுன் மாதம் தொடங்கி தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் முக்கியமானவர் சேரன். காரணம் அவர் தமிழ் சினிமாவில் பல முக்கியமான திரைப்படங்களை அளித்துள்ளார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற நாள் முதல், ஹவுஸ்மேட்ஸ்களினால் பல்வேறு அவமானங்களை பெற்று வந்தார். இதற்கு அவர் வீட்டை விட்டு வெளியேறி விடலாம் என்று பல இயக்குநர்களும், பொதுமக்களும் தெரிவித்தனர். இந்நிலையில் இன்றைய வாரத்திற்கான எவிக்சனில் சேரன் வெளியேற்றப்பட்டார்.

தற்போது பிக்-பாசில் இருக்கும் சீக்ரெட் ரூமில் சேரன் இருந்து வருகிறார். அங்கு ஹவுஸ்மேட்ஸ்கள் பேசுவதை, பார்த்தும் கேட்டும் வருகிறார். இந்நிலையில் கவின் லாஸ்லியாவிடம் காதல் தொடர்பாக பேசுகிறார். கவின் பேசுவதை லாஸ்லியா தவிர்த்து விடுகிறார்.

இதனைக்கேட்ட சேரன், காதல் விவகாரம் பற்றி இனி பேச மாட்டோம் என இருவரும் சத்தியம் செய்திருக்கிறார்கள். இந்த வாரம் கவின் நாமினேஷனில் இருப்பதால், லாஸ்லியாவிடம் காதல் விஷயத்தை பற்றி பேச போர்ஸ் செய்கிறார். எப்போதும் அவர் இதை தான் செய்கிறார்’ எனக் கூறினார்.

இதன் மூலம் சேரனின் ரகசிய அறை ஆப்ரேஷனில் முதல் சக்சஸ் கிடைத்துள்ளது. கவினின் முகமூடி கிழிக்கப்பட்டுள்ளது என நொட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Advertisement