ஊருக்குள் புகுந்து ஆடுகளை வேட்டையாடி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது

268

கோவை அருகே ஊருக்குள் புகுந்து ஆடுகளை வேட்டையாடி வந்த சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது.

கோவை மதுக்கரை வனச்சரக பகுதியையொட்டிய கிராமத்தில் புகுந்த சிறுத்தை ஒன்று ஆடுகளை வேட்டையாடி வந்தது. இதுவரை 8 ஆடுகள் சிறுத்தையின் பசிக்கு பலியாகியுள்ளது.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில், சிறுத்தையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்த வனத்துறையினர், அதை பிடிப்பதற்காக மோலப்பாளையம் மற்றும் செம்மேடு பகுதிகளில் கூண்டு வைத்தனர்.

இந்நிலையில், கடந்த 40 நாட்களாக கூண்டுக்குள் சிக்காத சிறுத்தை, இன்று அதிகாலை 5 மணியளவில் கூண்டுக்குள் சிக்கியது.

இதனையடுத்து, கூண்டுக்குள் சிக்கிய சிறுத்தையை வனத்துறையினர் தெங்குமரஹடா வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

சிறுத்தை பிடிபட்டதால், அக்கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.