சீனாவில் 5 பேர் பலி, தொடரும் ரசாயன தொழிற்சாலை விபத்துக்கள்

190

சீனாவின் இன்னர் மங்கோலியா தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள டோங்சிங் கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் இன்று அதிகாலை வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, ஆலையின் ஒரு பகுதியில் உள்ள பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது.

இதுபற்றி உடனடியாக தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 5 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of